காதலை தெரிவித்ததால் கல்லூரியில் இருந்து நீக்கம்!
- IndiaGlitz, [Saturday,March 13 2021]
காதலை தெரிவித்ததால் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லாகூரில் சேர்ந்த கல்லூரி ஒன்றில் மாணவி ஒருவர் தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவருக்கு தனது காதலை புரபோஸ் செய்துள்ளார். அந்த மாணவரும் காதலை ஏற்று கொண்டதை அடுத்து இருவரும் கட்டியணைத்து தங்கள் காதலை வெளிப்படுத்தினர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து கல்லூரி நிர்வாகம் அவர்கள் இருவர் மீதும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் இருவரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து அந்த இருவரும் கல்லூரிக்குள் நுழைய தடை விதித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து சக கல்லூரி மாணவர்கள் மட்டும் நெட்டிசன்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தங்களுடைய கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கல்லூரியில் காதலிப்பது தவறா? இது போன்ற கடுமையான நடவடிக்கை தேவையா? என்பது போன்ற கருத்துக்களை அவர்கள் பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லூரி நிர்வாகம் தங்கள் முடிவை மாற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.