இனிமேல் பீரோவில் உள்ள பொருட்களை திருட முடியாது: கல்லூரி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!
- IndiaGlitz, [Tuesday,June 04 2019]
வெளியூர்களுக்கு செல்லும்போது பெரும்பாலானோர்களின் கவலை பீரோவில் வைத்துள்ள பணம், நகைகள் ஆகியவை நாம் திரும்பி வரும்வரை பத்திரமாக இருக்குமா? என்பதாகத்தான் இருக்கும். பூட்டிய வீட்டிற்குள் பீரோவை திறந்து லட்சக்கணக்கில் பணம், நகைகள் கொள்ளை போவது குறித்த செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் கல்லூரி மாணவர் ஒருவரின் கண்டுபிடிப்பு இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிஷ்குமார் என்பவர் பீரோவில் சில மின்னணு சாதனங்களை பொருத்தி அதனை செல்போனுடன் இணைத்துள்ளார். இதனால் பீரோவை சாவி போட்டு திறந்தாலும் பூட்டை உடைத்து திறந்தாலும் உடனே செல்போனுக்கு அழைப்பு வரும் வகையில் இவர் சர்க்யூட் செட் செய்துள்ளார்.
பீரோவில் உள்ள பொருட்கள் திருடு போன பின்னர் போலீசில் புகார் கொடுப்பதற்கு பதிலாக இந்த சாதனத்தை பீரோவில் பொருத்திவிட்டால் திருடன் திருடிக்கொண்டிருக்கும்போதே கண்டுபிடித்து உடனடியாக அக்கம் பக்கத்தினர்களுக்கோ அல்லது காவல்துறையினர்களுக்கோ தகவல் அளித்து நம்முடைய பொருட்களை காப்பாற்றி கொள்ளலாம். கல்லூரி மாணவர் ஹரிஷின் இந்த கண்டுபிடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது