close
Choose your channels

இன்ஸ்டாகிராமில் காதல்: 13 வயது, 8 வயது சிறுமிகளை கடத்திய கல்லூரி மாணவர்!

Monday, December 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த கல்லூரி மாணவர் ஒருவர் 13 வயது சிறுமியையும் அவரது 8 வயது தங்கையையும் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை கோட்டூர்புரத்தில் சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவர் ஒருவரை காதலித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென 13 வயது சிறுமி தனது சித்தப்பா மகள் 8 வயது சிறுமியுடன் காணாமல் போனார்

இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை செய்தனர். சிறுமிகள் இருவரும் தங்களுடன் செல்போனையும் எடுத்துச்சென்று இருந்ததாகவும் ஆனால் அந்த செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் வாட்ஸ் அப் மூலம் அழுதபடியே வீடியோ ஒன்றை சிறுமியின் மொபைல் போனுக்கு அனுப்பினார். இந்த வீடியோவை பார்த்து சிறுமிகள் மீண்டும் வீடு திரும்புவார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது

இந்த நிலையில் கல்லூரி மாணவனுடன் 8 வயது மற்றும் 13 வயது சிறுமி ரயிலில் சென்றுக் கொண்டு இருந்தபோது செல்போனை ஆன் செய்தனர். வாட்ஸ்அப் வீடியோவில் தங்களுடைய பெற்றோர்கள் அழுதுகொண்டே பதிவு செய்த வீடியோவை பார்த்ததும் சிறுமிகளும் அழத்தொடங்கிவிட்டனர்

இதை தற்செயலாக அந்தப் பக்கம் வந்த திருநங்கை ஒருவர் பார்த்து டிடிஆரிடம் இடம் புகார் அளித்தார். டிடிஆர் உடனடியாக இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததால் அடுத்த ஸ்டேஷனில் ரயில் நின்றபோது கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டதோடு, சிறுமிகளும் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்த தகவல் பெற்றோர்களுக்கு அளிக்கப்பட்டதை அடுத்து என்று பெற்றோர்கள் உடனடியாக ரயில் நிலையத்திற்கு வந்து சிறுமிகளை மீட்டுச் சென்றனர் இதுகுறித்து கல்லூரி மாணவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்தபோது அவரது பெயர் சூரிய பிரகாஷ் என்றும் அவர் 2 சிறுமிகளையும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து இரண்டு சிறுமிகளை கடத்தியதாக கல்லூரி மாணவர் சூரியபிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் 13 வயது சிறுமியை காதலித்து, சிறுமியையும் அவருடைய தங்கையையும் கடத்திய கல்லூரி மாணவரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment