கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,April 16 2020]
தமிழகத்தின் கல்லூரிகளில் நடத்தப்படும் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் அடுத்த கல்வி ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அறிவித்துள்ளது.
அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு தற்போது முதலே தயாராக வேண்டும் என்றும் உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் தாக்குதலை சமாளிக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்துக் கல்லூரிகளுக்கும் 17.03.2020 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை. கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களிலிருந்தும் அயல் நாட்டிலிருந்தும் வந்து இங்கு கல்வி பயில்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் மீண்டும் கல்லூரிகள் துவங்கும் அடுத்த பருவம் செமஸ்டரின் துவக்கத்தில் தேர்வுகள் நடத்தப்படும். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பதற்கான தேதி அரசால் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.