4 ஆண்டுகளாக கல்லூரி மாணவியை சீரழித்த திருமணமான காமுகன் கைது!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஈரோடு அருகே கல்லூரி மாணவி ஒருவரை கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த திருமணமான காமுகன் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு காந்தி நகரை சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு தனியார் கல்லூரி ஒன்றில் சேர்ந்தார். இவருக்கும் கல்லூரி அருகே உள்ள கடை ஒன்றில் அடிக்கடி வரும் ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி கல்லூரிக்கு வெளியே சந்தித்து கொள்ளும் இவர்கள், மாணவியின் பிறந்த நாள் அன்று காரில் வெளியூர் சென்றுள்ளனர். அப்போது மாணவியிடம் ராதாகிருஷ்ணன் சில்மிஷம் செய்து அதனை வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை காட்டி அடிக்கடி மிரட்டிய ராதாகிருஷ்ணன், மாணவியை கடந்த நான்கு ஆண்டுகளாக பலமுறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இதில் அந்த மாணவி இரண்டு முறை கர்ப்பமாகியதும், அதனையடுத்து ராதாகிருஷ்ணனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று கர்ப்பத்தை கலைத்ததாகவும் தெரிகிறது
இந்த நிலையில் மாணவியிடம் மாற்றத்தை கண்டுபிடித்த பெற்றோர்கள் அவரிடம் இதுகுறித்து விசாரித்தபோது மாணவி தனது பெற்றோர்களிடம் உண்மையை கூறியுள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் வசதியான பின்னணியை கொண்ட அவர் பல கல்லூரி மாணவிகளை சீரழித்தது தெரிய வந்தது.
பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை உடனடியாக பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், நான்கு ஆண்டுகள் பாலியல் தொல்லைகளை வெளியே சொல்லாமல் இருந்ததால்தான் இதுபோன்ற கயவர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக எடுத்து கொள்வதாகவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com