பாதி எறிந்த நிலையில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி! பின்னணியில் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள காட்டுப் பகுதியில் உடல் சிதைந்த நிலையில், பாதி உடல் எரிக்கப்பட்டு பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய படி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியில் ஒரு பெண்ணின் உடல், பாதி எரிந்த நிலையில் தூக்கில் தூங்குவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் தூக்கில் தொங்கிய பெண்ணின் பெயர் மது என்பதும், அவர் கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது.
கடந்த 14ஆம் தேதி நவோதயா பொறியியல் கல்லூரியில் இருந்து இவர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவர் அருகே, தேர்வில் தேர்ச்சி பெறாததால் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் ஒன்று கிடைத்தது. இதை வைத்து போலீசார் தற்கொலை என கூறினார்.
ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் பெண், எப்படி பாதி உடல் எறிந்த நிலையில் தூக்கில் தொங்க முடியும் என சந்தேகம் எழுந்தது. இதனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, யாரேனும் இப்படி செய்திருக்கலாம் என கூறப்பட்டது.
மேலும் போலீசார் இதனை தற்கொலை வழக்கு என முடிக்க பார்க்கிறார்கள் என்று, மனித உரிமை அமைப்பினர் மற்றும் நவோதயா கல்லூரி மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிகபட்ச தண்டனை இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு வழங்க வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் குதித்தனர்.
மர்மனான முறையில் இறந்த மதுவிற்கு, நீதி கிடைக்க வேண்டும், அவர் எப்படி இறந்தார் என்கிற உண்மை தகவல் தெரிய வரவேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் மெழுகுவர்த்தியுடன் ஊர்வலமாக சென்றனர். மேலும் "justice for madhu " ஹாஷ்டாக் பயன்படுத்தி மாணவியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு வருகிறார்கள்.
எனினும், உரிய விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே இது கொலையா? தற்கொலையா? பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவி இறந்தாரா என்பது தெரிய வரும்.
title:பாதி எறிந்த நிலையில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி! பின்னணியில் யார்?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments