காதலுக்கு தாய் எதிர்ப்பு! விபரீத முடிவு எடுத்த பெண்!
Send us your feedback to audioarticles@vaarta.com
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அயனாவரத்தை சேர்ந்த, கல்லூரி மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயனாவரம் பகுதியில் உள்ள பச்சைக்கல் வீராசாமி தெருவைச் சேர்ந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் லட்சுமி (40 ) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் தீபிகா(18 ), கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் (15 ) என்கிற தம்பியும் உள்ளார்.
லட்சுமியின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் லட்சுமி, கர்ணன் என்பவருடன் பழகி வந்ததாக தெரிகிறது. இதனால் அக்கம் பக்கத்தினர் அவரை அங்கிருந்து காலி செய்ய சொல்லவே... அயனாவரம் பரசுராம ஈஸ்வரன் கோவில் வடக்கு மாட வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.
இந்நிலையில் தீபிகா ஒருவரை காதலித்துள்ளார். சம்பவத்தன்று, தன்னுடைய காதலனை குடும்பத்திலுள்ளவர்களிடம் அறிமுகம் செய்து வைத்து, திருமணத்திற்கு சம்மதம் வாங்குவதற்காக அழைத்து வந்துள்ளார்.
இவர் வந்த நேரத்தில் லட்சுமி, கர்ணன் மற்றும் அவருடைய தம்பி அரவிந்த் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். தங்களுடைய காதல் விஷயத்தை வெளிப்படுத்தி, திருமணத்திற்கு சம்மதம் கேட்டதற்கு தாய் லட்சுமி மற்றும் கர்ணன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முடிந்த வரை அவர்களிடம் வாக்குவாதம் செய்த தீபிகா, திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் கீழே குதித்து விடுவேன் என மிரட்டி உள்ளார். அவர்கள் கண்டுகொள்ளாததால் உண்மையிலேயே மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. இரண்டு கைகளும் முறிந்தது, கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமி மற்றும் கர்ணன் ஆகியோரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com