கல்லூரி மாணவியின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட பேராசிரியர்: பரிதாபமாக பலியான உயிர்!

ஒடிசாவில் கல்லூரி மாணவி ஒருவரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது பேராசிரியரே வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசாவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அவர் படிக்கும் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் கணேஷ் என்பவரை காதலித்தார். இருவரும் ஒரு சில நாட்கள் நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கல்லூரி மாணவியை கைவிட்டு வேறொரு பெண்ணை பேராசிரியர் கணேஷ் திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து நியாயம் கேட்கப் சென்ற கல்லூரி மாணவியை அடித்து விரட்டியதோடு, கல்லூரி மாணவியுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பேராசிரியர் கணேஷ் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆன நிலையில் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் இது குறித்து கல்லூரி மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் கல்லூரி பேராசிரியர் கணேசனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கல்லூரி மாணவிக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பேராசிரியர் ஒருவரே காதலித்து அதுமட்டுமின்றி நெருக்கமான இருந்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

கொரோனாவில் இருந்து குணமான விஜய் பட நாயகியின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'பாய்ஸ்' திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் நடித்த 'சச்சின்' 'வேலாயுதம்' உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிலியா

பிக்பாஸ் ரைசா அடுத்த படத்தில் கனெக்சன் ஆன 'மாஸ்டர்' லோகேஷ் கனகராஜ்

தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'திருடன் போலீஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரான இயக்குனர் கார்த்திக் ராஜூ, தற்போது 'சூர்ப்பனகை

சுரேஷ் ரெய்னா வீட்டில் நடந்த சோகம்: நடிகர் சூர்யாவின் ஆறுதல்

சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையிலிருந்து ஐபிஎல் போட்டியில் விளையாட துபாய் சென்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரரான

கொரோனா காலத்தை 20 அழகிகளுடன் கழிக்கும் தாய்லாந்து மன்னர்!!! சிறையில் இருந்து மேலும் ஒருவர்?

தாய்லாந்து மன்னரான மகா வாஜிராலோங்க் கோர்ன் தற்போது கொரோனா காலத் தனிமையை ஜெர்மனியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அனுபவித்து வருகிறார்.

கர்நாடகாவில் 5 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனாவா??? வைரலாகும் தகவல்!!!

கர்நாடக மாநிலத்தில் நுழைவுத்தேர்வு ஒன்றில் கலந்து கொண்ட 5 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.