ஊரடங்கு நேரத்திலும் ஓடிப்போய் காதலனை திருமணம் செய்த கல்லூரி மாணவி!
- IndiaGlitz, [Tuesday,April 21 2020]
ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வரும் நிலையில் திருச்சி அருகே ஒரு காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடி வந்து திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருச்சியை சேர்ந்த வினோத் என்ற 25 வயது வாலிபருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜீவிதா என்ற மூன்றாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஒருவருக்கும் கடந்த சில மாதங்களாக காதல் மலர்ந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வரும் நிலையில் ஜீவிதாவின் பெற்றோர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதுமட்டுமின்றி ஜீவிதாவுக்கு அவர்கள் அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததாகவும் கூறப்ப்டுகிறது
ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் ஜீவிதாவுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையையும் அவர்கள் தயார் செய்துவிட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இது குறித்து தனது காதலர் வினோத்தை சந்தித்து பேசிய ஜீவிதா, ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு தனக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் எனவே உடனடியாக நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஜீவிதா வினோத்திடம் பிடிவாதமாக கூறியுள்ளார்
இதனை அடுத்து வேறு வழியின்றி ஜீவிதாவின் முடிவை ஏற்றுக் கொண்ட வினோத் தனது குடும்பத்தினர் முன்னிலையில் அருகிலிருந்த கோவில் ஒன்றில் ஜீவிதாவை திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த ஜீவிதாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இரு தரப்பையும் வரவழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதில் ஜீவிதா, வினோத்துடன் வாழ்வேன் என்றும் பெற்றோருடன் போக மாட்டேன் என்று பிடிவாதம் செய்தார். அவர் வயதளவில் மேஜர் என்பதால் அவரை அவரது கணவர் உடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்
ஊரடங்கு சமயத்திலும் காதல் ஜோடி ஒன்று வீட்டை எதிர்த்து ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டது திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது