ஊட்டி போல் மாறும் சென்னை தட்பவெப்ப நிலை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரவு நேரங்களில் குளிர் அதிகமாகியுள்ள நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் வட தமிழகத்தில் அதிகபட்ச குளிர் நிலவும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருத்தணி, நாமக்கல், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையான குளிர் இருக்கும் என்றும், மலைப்பிரதேசமான ஊட்டியில் 4-5C, வால்பாறையில் 6-7C அளவுக்கு மட்டுமே வெப்பநிலை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
சென்னையை பொருத்தவரை கடலோர பகுதிகளில் 20C அளவிற்கும் மற்ற பகுதிகளில் 17-18C அளவிற்கும் வெப்பநிலை இருக்கும் என்றும் அறிவித்துள்ளார். எனவே அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை மக்கள் ஊட்டி சீசன் குளிரை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout