ஊட்டி போல் மாறும் சென்னை தட்பவெப்ப நிலை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

  • IndiaGlitz, [Monday,January 22 2018]

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரவு நேரங்களில் குளிர் அதிகமாகியுள்ள நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் வட தமிழகத்தில் அதிகபட்ச குளிர் நிலவும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருத்தணி, நாமக்கல், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையான குளிர் இருக்கும் என்றும், மலைப்பிரதேசமான ஊட்டியில் 4-5C, வால்பாறையில் 6-7C அளவுக்கு மட்டுமே வெப்பநிலை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

சென்னையை பொருத்தவரை கடலோர பகுதிகளில் 20C அளவிற்கும் மற்ற பகுதிகளில் 17-18C அளவிற்கும் வெப்பநிலை இருக்கும் என்றும் அறிவித்துள்ளார். எனவே அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை மக்கள் ஊட்டி சீசன் குளிரை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

     

More News

கட்டண உயர்வு ஒன்றுதான் தீர்வா? மாற்று வழியில் அரசு சிந்திக்கலாமே!

தமிழகத்தில் நேற்று முதல் பேருந்து கட்டணங்கள் சுமார் 50% வரை உயர்ந்துள்ளது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் மீது அரசு இன்னுமொரு சுமையை ஏற்றியுள்ளது.

விஜய் ஆண்டனிக்கு கிடைத்த 'திமிர் பிடிச்சவன்' பட்டம்

விஜன் ஆண்டனி நடிக்கவுள்ள அடுத்த பட டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது., இந்த படத்திற்கு 'திமிர் பிடிச்சவன்' என்ற டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

'உள்ளத்தை அள்ளித்தந்த' சுந்தர் சி-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

காமெடி, ஆக்சன் உள்பட பல பரிணாமங்களில் வெற்றி படங்களை இயக்கிய சுந்தர் சி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் அவருக்கு IndiaGlitz சார்பில் எங்களது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

'அருவி' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் யுவன்ஷங்கர் ராஜா

கோலிவுட் திரையுலகில் சமீபகாலமாக தரமான மற்றும் வெற்றி படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்று ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்நிறுவனம் சமீபத்தில் தயாரித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' மற்றும் '

சூர்யா குறித்த விமர்சனம்: சன் டிவிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்

சன் டிவிக்கும் நடிகர் சங்கத்திற்கும் நீண்டகாலமாக நல்ல உறவு உள்ளது. சமீபத்தில் நடந்த நட்சத்திர விழாவில் சன் டிவி ஒரு பெரிய தொகையை நடிகர் சங்க கட்டிட நிதியாக வழங்கியது.