'வலிமை' ரிலீஸ் தினத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் அதிரடி கைது!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆன தினத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 24ஆம் தேதி வரை படம் ரிலீஸான அன்று கோவையில் உள்ள கங்கா என்ற திரையரங்கம் முன்பு டிக்கெட்டுகளை வாங்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது ‘வலிமை’ படத்தின் டிக்கெட் மிக அதிக அளவில் விற்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சில மர்ம நபர்கள் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதோடு, அங்கிருந்த சிசிடிவி காட்சியின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளின் பதிவின்படி கோவையை சேர்ந்த லட்சுமணன் என்ற 20 வயது வாலிபர் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் ‘வலிமை’ படத்தின் டிக்கெட்களை அதிக விலைக்கு ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் விற்பனை செய்ததால் ஆத்திரமடைந்து பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் இந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கு மேலும் சிலருக்கு தொடர்பு உண்டா? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments