2 ஆண்டுகள் நீட் தேர்வுக்கு தயாரான 19 வயது மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை: என்ன காரணம்?
- IndiaGlitz, [Wednesday,August 19 2020]
கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி மையத்தில் படித்து தயாராகி வந்த 19 வயது மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டதால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என்று என்ற விதி அமல்படுத்தப்பட்டது. இதற்கு தமிழகத்தில் இருந்து பெரும் எதிர்ப்பு வந்தாலும் வேறு வழியின்றி மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு நீட்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் இந்த தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 19 வயது மாணவி நீட் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி மையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்து தயாராகி வந்தார்.
ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு விரைவில் நடைபெற உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு செய்யப்பட்டதை அடுத்து தேர்வு பயம் காரணமாக மாணவி சுபஸ்ரீ திடீரென தற்கொலை செய்து கொண்டார். கோவை ஆர்.எஸ் புரத்தை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ தனது வீட்டில் தூக்கில் தொங்கி ற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.