கோவை தெற்கில் கூட்டு சேர்ந்த காங்கிரஸ்,மநீம,நாதக...! பாஜகவுக்கு பளார்...!

  • IndiaGlitz, [Tuesday,April 06 2021]

கோவை தெற்கு தொகுதியில், பாஜவினர் டோக்கன் தந்து அதற்கு பணம் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமார் களமிறங்குகிறார். பாஜக சார்பாக வானதி ஸ்ரீனிவாசனும், மக்கள் நீதி மய்யம் சார்பாக முதல்வர் வேட்பாளரான கமலஹாசனும் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில் பாஜக வேட்பாளர் வானதி வேட்பாளர்களுக்கு, டோக்கன் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மநீம-தலைவர் கமல்ஹாசனும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் இக்குற்றச்சாட்டை பாஜக-வினர் மீது வைத்துள்ளனர். மேலும் இப்படி செய்தவர்களை காவல் துறையினரிடத்தில் பிடித்து கொடுத்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை எனக்கூறப்படுகிறது.

பாஜகவினரின் இச்செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர், நாதக வேட்பாளர் வகாப் உள்ளிட்டோர் கோவையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காவல் அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தினர். டோக்கனுக்கு பணம் தருவதாக பாஜாவினர் மீது மநீம தலைவர் கமலும் குற்றம்சாட்டியுள்ளதால், கோவை தெற்கில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

More News

பெங்களூரில் படிப்படியாக வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள்....!

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தொற்று 2-வது அலையாக உருவெடுத்து பரவி வருவதால் பெங்களூரில் சில கட்டுப்பாடுகள் வந்துள்ளது. 

ஓட்டு போட்ட 'குக் வித் கோமாளி' பிரபலங்கள்! வைரல் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு என்பதும் தெரிந்ததே. வரும் சனி ஞாயிறு

குடும்பத்துடன் வந்து வாக்களித்த எடப்பாடியார்...!

வாக்களிக்கும் இடம் வரை தனது பேரனை அழைத்து சென்று, எடப்பாடி பழனிச்சாமி வாக்களித்தார். 

கொரோனவால் பாதிக்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் எப்படி இருக்கிறார்? அவரே பதிவு செய்த டுவிட்!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

சைக்கிளில் வந்ததன் காரணம் என்ன? விஜய் தரப்பு விளக்கம்!

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரமுகர்கள் பலர் வாக்களித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்