கோவை தெற்கில் கூட்டு சேர்ந்த காங்கிரஸ்,மநீம,நாதக...! பாஜகவுக்கு பளார்...!
- IndiaGlitz, [Tuesday,April 06 2021]
கோவை தெற்கு தொகுதியில், பாஜவினர் டோக்கன் தந்து அதற்கு பணம் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமார் களமிறங்குகிறார். பாஜக சார்பாக வானதி ஸ்ரீனிவாசனும், மக்கள் நீதி மய்யம் சார்பாக முதல்வர் வேட்பாளரான கமலஹாசனும் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் பாஜக வேட்பாளர் வானதி வேட்பாளர்களுக்கு, டோக்கன் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மநீம-தலைவர் கமல்ஹாசனும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் இக்குற்றச்சாட்டை பாஜக-வினர் மீது வைத்துள்ளனர். மேலும் இப்படி செய்தவர்களை காவல் துறையினரிடத்தில் பிடித்து கொடுத்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை எனக்கூறப்படுகிறது.
பாஜகவினரின் இச்செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர், நாதக வேட்பாளர் வகாப் உள்ளிட்டோர் கோவையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காவல் அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தினர். டோக்கனுக்கு பணம் தருவதாக பாஜாவினர் மீது மநீம தலைவர் கமலும் குற்றம்சாட்டியுள்ளதால், கோவை தெற்கில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.