'தளபதி 67'  படத்தில் பணிபுரிய வாய்ப்பு? கோவை போலீஸ் கமிஷனர் அறிவிப்பு!

’தளபதி 67’ படத்தை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் படத்தில் பணிபுரிய ஒரு வாய்ப்பு குறித்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தமிழக காவல் துறை தீவிரமாக எடுத்து வரும் நிலையில் கோவை மாநகர காவல் துறை மற்றும் தனியார் நிறுவனம் ஒன்று இணைந்து குறும்படப் போட்டியை அறிவித்து உள்ளது.

’போதை தடுப்பு விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரையிலான குறும்படங்களை அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் மட்டும் பங்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த குறும்பட போட்டியில் வெற்றி பெற்று அந்த படத்தில் உதவி இயக்குனராகும் வாய்ப்பை பெறுபவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

15 வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி சம்பவம் நடந்துச்சு: 'மிரள்' படத்தின் மிரட்டும் டிரைலர்

நடிகர் பரத் நடித்த 'மிரள்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. 

'பொன்னியின் செல்வன்' படத்தின் காஸ்ட்யூம் மற்றும் நகைகள்: லைகா வெளியிட்ட ஆச்சரியமான வீடியோ!

 பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும்

'துணிவு' படத்தின் முக்கிய பணியை முடித்த அஜித்.. 'ஏகே 62' படத்திற்கு தயாராகிறாரா?

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில

விஜய் டிவி பிரபலம் இயக்கும் படத்தில் தேசிய விருது பெற்ற கலைஞர்!

விஜய் டிவி பிரபலம் இயக்கக்கூடிய திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனலட்சுமி கூறிய ஒரே ஒரு வார்த்தை.. ஜெயிலுக்கு அனுப்பிய பிக்பாஸ்!

தனலட்சுமி கூறிய ஒரே ஒரு வார்த்தையால் போட்டியாளர்களில் ஒருவரை பிக்பாஸ் ஜெயிலுக்கு அனுப்பி உள்ளது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.