பெண் ஊழியர்கள் டிரஸ் மாற்றும் இடத்தில் ரகசிய கேமிரா! வீடியோ வெளியானதால் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Tuesday,January 07 2020]

கோவை அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் பெண் ஊழியர்கள் டிரஸ் மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்த சூப்பர்வைஸரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை சாய்பாபா காலனியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெண்கள் சிலர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வழக்கமாக வீட்டில் இருந்து ஒரு உடையில் வந்து, அதன் பின்னர் உடைமாற்றும் அறையில் பெட்ரோல் பங்க் கொடுத்த யூனிபார்ம் அணிந்து பணிபுரிவது வழக்கம்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒருநாள் 5 பெண் ஊழியர்கள் வரிசையாக இந்த அறைக்கு வந்து தங்கள் உடைகளை மாற்றி சென்ற வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில் பெண்கள் உடை மாற்றும் அறைக்குள் முதலில் ஆண் சூப்பர்வைசர் ஒருவர் வருகிறார். அவர் செல்போனில் உள்ள கேமராவை ஆன் செய்து ஒரு மறைவான இடத்தில் வைக்கிறார். அதன் பின்னர் பெண்கள் ஒவ்வொருவராக வந்து உடையை மாற்றி சென்றவுடன் முதலில் வந்த சூப்பர்வைசர் திரும்பவும் வந்து அந்த செல்போனை எடுத்துச் செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் இது குறித்து விசாரணை செய்ய பெட்ரோல் பங்க் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

More News

கடைசி நேரத்தில் திடீரென திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: அதிர்ச்சி காரணம்!

அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள ஒரு இளைஞருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்த நிலையில் கடைசி

'தர்பார்' படம் பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை வந்த ரசிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது.

அமெரிக்கா இராணுவமும் ட்ரம்பும் இனிமேல் தீவிரவாதிகள்.. ஈரான் அறிவிப்பு.

அமெரிக்கா இராணுவமும் ட்ரம்பும் இனிமேல் எங்கள் நாட்டில் தீவிரவாதிகள் என ஈரான் அறிவிப்பு.

JNU மாணவர்கள் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில், அனுராக் காஷ்யப்..!

கேட்வே ஆஃப் இந்தியாவில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் விஷால் தத்லானி ஆகியோர் இணைந்தனர்.

செல்போனால் வரும் பேராபத்து

செல்போன்கள் மன அளவிலும் உடல் அளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் செல்போன் வருவதாக நினைப்பது கூட பேராபத்தை விளைக்கும் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.