மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Sunday,July 05 2020]
தமிழகத்தில் ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு ஆகியோர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு எம்,.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் என்பவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்றின் அறிகுறி இருந்ததாகவும், அதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.