கோவை சிறுமி கொலை: பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,March 27 2019]

கோவையில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி மர்மமான முறையில் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டிருந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கும் சிறுமியின் பெற்றோர்களுக்கும் எழுந்தது.

இந்த நிலையில் இந்த சந்தேகம் தற்போது பிரேதபரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்திருப்பதால் இந்த வழக்கை கொலை வழக்குடன் போக்சோ சட்டப்பிரிவின் கீழும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தங்கள் வீட்டு அருகே இருக்கும் 4 பேர் மீது சந்தேகம் உள்ளதாக சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் வீடு அருகே குடியிருந்து வரும் ஒரு இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.