இஸ்லாமியருடன் கோவிலில் தரிசனம் செய்த கோவை திமுக வேட்பாளர்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவையில் திமுக கட்சியினர் சார்பாக வேட்பாளராக போட்டியிடும், பையா (எ) கிருஷ்ணன் சமீபத்தில் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை மாவட்டம்,கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக சார்பாக களமிறங்குபவர் தான் பையா (எ) கிருஷ்ணன். இவர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்பு கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தொகுதி சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்களுடன் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கைகள் மட்டுமே வருகின்றன, அதை அவர்கள் நிறைவேற்றுவதே இல்லை. தற்சமயம் பல வாக்குறுதிகளை கூறும் அவர்கள், ஆட்சியின் போது ஏன் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை, என்று கூறி பிரச்சாரம் செய்தார்.
பின்பு கவுண்டம்பாளையம், உடையார் வீதியில் மண்பாண்டத்தொழில் செய்பவர்களிடம் சென்று வாக்கு சேகரித்தார். அங்குள்ள கோவிலுக்கு இஸ்லாமியர்களுடன் நுழைந்து, சாமி தரிசனம் செய்தார்.
திமுக ஆட்சி அமைத்தவுடன் முக.ஸ்டாலின் தலைமையில், பையா கவுண்டர் மண்பாண்ட தொழிலுக்காக மண் எடுப்பதில் ஏற்படும் சிக்கலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதை செய்வேன்.
மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுக்க காவல்துறையினர் மற்றும் பிற அதிகாரிகள் எந்த எந்த தடையும் விதிக்கமாட்டார்கள் என்று உறுதியுடன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com