இஸ்லாமியருடன் கோவிலில் தரிசனம் செய்த கோவை திமுக வேட்பாளர்...!

  • IndiaGlitz, [Thursday,March 25 2021]

கோவையில் திமுக கட்சியினர் சார்பாக வேட்பாளராக போட்டியிடும், பையா (எ) கிருஷ்ணன் சமீபத்தில் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டம்,கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக சார்பாக களமிறங்குபவர் தான் பையா (எ) கிருஷ்ணன். இவர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்பு கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தொகுதி சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்களுடன் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கைகள் மட்டுமே வருகின்றன, அதை அவர்கள் நிறைவேற்றுவதே இல்லை. தற்சமயம் பல வாக்குறுதிகளை கூறும் அவர்கள், ஆட்சியின் போது ஏன் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை, என்று கூறி பிரச்சாரம் செய்தார்.

பின்பு கவுண்டம்பாளையம், உடையார் வீதியில் மண்பாண்டத்தொழில் செய்பவர்களிடம் சென்று வாக்கு சேகரித்தார். அங்குள்ள கோவிலுக்கு இஸ்லாமியர்களுடன் நுழைந்து, சாமி தரிசனம் செய்தார்.

திமுக ஆட்சி அமைத்தவுடன் முக.ஸ்டாலின் தலைமையில், பையா கவுண்டர் மண்பாண்ட தொழிலுக்காக மண் எடுப்பதில் ஏற்படும் சிக்கலை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதை செய்வேன்.

மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுக்க காவல்துறையினர் மற்றும் பிற அதிகாரிகள் எந்த எந்த தடையும் விதிக்கமாட்டார்கள் என்று உறுதியுடன் கூறியுள்ளார்.

More News

சரமாரியாக கேள்வி கேட்ட சிறுமிக்கு சளைக்காமல் பதில் சொன்ன குஷ்பு!

நடிகை குஷ்பு சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகை கங்கனாவுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்: எந்த வழக்கில் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் 'தலைவி' என்ற திரைப்படத்தின் நாயகியுமான கங்கனா ரனாவத்துக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது 

பிரச்சனை ரொம்ப பெரிசா ஆயிடுச்சு, என்ன பண்றதுன்னே புரியலை: கே.எஸ்.ரவிகுமார் வெளியிட்ட வீடியோ!

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கேஎஸ் ரவிக்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தல அஜித், தளபதி விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்

விஜய்சேதுபதிக்கு விருது வாங்கி கொடுத்ததே அதுதான்: நெட்டிசன் கிண்டலுக்கு குஷ்பு பதிலடி!

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார் என்பதும் அவருக்கு வரும் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு கொடுத்து உள்ளது

மினி லாரியில் கேரளா டூ தூத்துக்குடி சென்ற பணம்...!

கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு மீன்வாங்க மினிலாரி மூலம் வந்த வாகனத்தை பறக்கும் படையினர் மடக்கிப்பிடித்தனர்.