முதல்முறையாக மாவட்ட ஆட்சி தலைவருக்கு கொரோனா உறுதி: பெரும் பரபரப்பு
- IndiaGlitz, [Wednesday,July 15 2020]
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கொரோனா அரசால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ்க்கு பாமர மக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் உள்பட பிரபலங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அது மட்டுமின்றி ஏராளமான காவல்துறையினரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும், ஒரு சில காவல் துறையினர் உயிரிழந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.