11 ஆண்டுகளில் இடிந்து விழுந்த கோவை சோமனூர் பேருந்து நிலையம். அதிர்ச்சியில் பொதுமக்கள்

  • IndiaGlitz, [Thursday,September 07 2017]

கோவை சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 11 வருடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சரியான பராமரிப்பு இல்லாமல் இடிந்துவிட்டதாகவும், குறிப்பாக மழை பெய்யும்போது பேருந்து நிலையத்தின் மேற்கூரையில் தேங்கி நிற்கும் தண்ணீர் கட்டிட்டத்திற்குள் கசிந்ததால் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த பேருந்து நிலையம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது மற்றொரு காரணமாக இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.

100 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பழங்கால கட்டிடங்கள் உறுதியாக இருக்கும் நிலையில் கட்டி முடிக்கப்பட்டு 11 ஆண்டுகள் மட்டுமே ஆன ஒரு கட்டிடம் இடிந்துள்ளது என்பது அனைவரையும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டிடம் கட்டிய காண்ட்ராக்டர், பொதுப்பணி அதிகாரிகள் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

More News

கோடிகள் எனது குறிக்கோள் அல்ல! திரையுலகம்தான் முக்கியம்: விஷால்

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'துப்பறிவாளன்' ..

நடிகை லலிதாகுமாரியின் சகோதரர் மகள் திடீர் மாயம்

பழம்பெரும் நடிகர் ஆனந்தன் அவர்களின் பேத்தியும், நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரி ஆகியோர்களின் சகோதரர் மகளுமான அபிர்ணா...

நீட் தேர்வை எதிர்த்து வேலையை ராஜினாமா செய்த அரசுப்பள்ளி ஆசிரியை

நீட் தேர்வை எதிர்த்து அரியலூர் அனிதா தன்னுடைய உயிரையே தியாகம் செய்த நிலையில் அதே நீட் தேர்வை எதிர்த்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை சபரிமாலா என்பவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்...

மெரீனா பீச்சுக்கு பூட்டு போட்ட காவல்துறை

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இந்த போராட்டம்...

மும்பை தொடர் வெடிகுண்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: தடா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்...