கோலமாவு கோகிலா' வசூலில் தெரிந்த நயன்தாராவின் மாஸ்

  • IndiaGlitz, [Monday,August 20 2018]

கோலிவுட் திரையுலகில் அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் மட்டுமே மாஸ் ஓப்பனிங் வசூலை கொடுத்துள்ளது. அந்த வகையில் முதல்முதலாக ஹீரோவே இல்லாமல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு திரைப்படம் மாஸ் வசூல் பெற்றுள்ளது என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' திரைப்படம் தான்

இந்த படத்திற்கு முதல் காட்சி முடிந்ததில் இருந்தே பாசிட்டிவ் ரிசல்ட் வந்து கொண்டிருந்த நிலையில் சென்னையில் மட்டும் இந்த படம் ரூ.1,58,45,116 கடந்த வாரயிறுதி நாட்களில் வசூல் செய்துள்ளது. சென்னையில் 20 திரையரங்குகளில் 274 காட்சிகள் திரையிடப்பட்டு திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் மாஸ் வசூலுக்கு சான்றாக உள்ளது.

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அந்த படம் சந்திக்கும் முதல் திங்கட்கிழமையின் வசூலை பொறுத்தே அமையும் என்று விநியோகிஸ்தர்கள் கூறுவதுண்டு. அந்த வகையில் இன்று பல திரையரங்குகளில் மிகவேகமாக இந்த படத்திற்கான டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்பட்டு கொண்டிருப்பதில் இருந்து நயன்தாராவின் மாஸ் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கோலமாவு கோகிலா திரைவிமர்சனம்  

More News

சைக்கிள் வாங்கும் பணத்தை நிவாரண நிதியாக கொடுத்த சிறுமிக்கு கிடைத்த வெகுமதி

கேரள மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதத்திற்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து நிவாரண நிதி குவிந்து வருகிறது

மீனவ ஹீரோக்களுக்காக முதல்வர் பினராயி விஜயனின் அதிரடி அறிவிப்பு

கேரள மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அம்மாநிலமே கிட்டத்தட்ட வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுபவர் யார்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் ஆன போட்டியாளர்களில் ஒருவர் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் இன்று எவிக்சன் ஆகும் நபரை கமல்ஹாசன் அறிவிக்கவுள்ளார்

கேரள வெள்ள நிவாரண நிதியாக அதிகபட்சம் கொடுத்த விக்ரம்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு கோலிவுட் திரையுலகினர் கடந்த சில நாட்களாக தாராளமாக நிதி வழங்கி வருவது தெரிந்ததே. 

மருத்துவமனையில் இருந்தபோதிலும் தேசப்பற்றை விடாத சீக்கியர்

கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களில் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கியர் முன்னாள் ராணுவ வீரர் சர்தார் லாப்சிங் என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்