இளசுகள் மத்தியில் ட்ரெண்டாகும் காக்ரோச் சேலஞ்ச்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தற்போதைய இளைஞர்கள் எதையும் மிகவும் வித்தியாசமாக செய்ய நினைக்கின்றனர். அந்த வகையில் சும்மா இருக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்து, அதற்கு ஒரு பெயர் வைத்து, அதனை ட்ரெண்டாக்கி மற்றவர்களையும் அதேபோல் செய்யுமாறு தூண்டி விட்டு சவால் விடுகின்றனர்.
இதுவரை அப்படி துவங்கப்பட்ட, ஐஸ் பக்கெட் சேலஞ்ச் , 10 இயர் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்ற விளையாட்டுகள் மிகவும் பிரபலமானது. இந்த சவாலை ஏற்று பிரபலங்கள் உட்பட பலர் தங்களுடைய புகைப்படம்,மற்றும் வீடியோ போன்றவற்றை வெளியிட்டனர்.
அந்த வகையில் தற்போது பர்மாவைச் சேர்ந்த, அலெக்சன் என்கிற இளைஞர், காக்ரோச் சேலஞ்ச் என்பதை உருவாக்கியுள்ளார். இந்த சவாலில் கரப்பான் பூச்சியை முகத்தில் விட்டுக்கொண்டு அதனை செல்பி புகைப்படம் எடுக்க வேண்டும். கரப்பான்பூச்சி என்றவுடன் தெறித்து ஓடும், சிலருக்கு இதனை சவாலாக விட்டு, இந்த சேலஞ்சை துவங்கியுள்ளார் பர்மாவைச் சேர்ந்த இந்த இளைஞர். இந்த விளையாட்டு தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments