ஒரு வருடமா கடலில் மிதந்த ரூ.600 கோடி மதிப்பிலான கொக்கைன்… பரபரப்பான கடத்தல் பின்னணி!!!

  • IndiaGlitz, [Friday,December 18 2020]

 

பசிபிக் தீவு அருகே உள்ள மார்ஷல் தீவு அருகே கடந்த செவ்வாய்கிழமை அன்று 649 கிலோ மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப் பட்டுள்ளது. இந்த கொக்கைன் பொருளை எதோ ஒரு கடத்தல் கும்பல் கடந்த 1 வருடத்திற்கு முன்பே நடுக்கடலில் கைவிட்டு சென்றிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

மத்திய அல்லது தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கடத்தப்பட்ட இந்த கொக்கைன் பொருளை கடத்தல் காரர்கள் நடுக்கடலிலே படகில் வைத்து விட்டுவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வருடமாக அந்தப் படகு மிதந்து கொண்டே இருந்து கடைசியில் மார்ஷல் தீவு அருகே கரை ஒதுக்கி இருக்கிறது. இந்தப் படகை மார்ஷல் தீவில் இருந்த ஒரு மீனவர் கரைக்கு இழுக்க முயன்று இருக்கிறார். ஆனால் முடியாத காரணத்தால் கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்.

தற்போது ஆளே இல்லாத அந்தப் படகில் இருந்து 649 கிலோ அளவிலான கொக்கைன் பொருள் கைப்பற்றப் பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 80 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.600 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. போதைப் பொருள் கடத்தல் அளவில் 649 கிலோ என்பதும் மிகப்பெரிய அளவாக கருதப்படுகிறது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட கொக்கைன் பொருளை கடலோர காவல் படையினர் எரித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.