'விக்ரம் 58' படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Wednesday,December 25 2019]

சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் ’விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் அதிகாரபூர்வ டைட்டில் குறித்த தகவல் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன்னர் வெளியாகியுள்ள டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோவில் இந்த படத்திற்கு ’கோப்ரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் ‘கோப்ரா’ என ஏற்கனவே வெளியான செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று இந்த மோஷன் போஸ்டர் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

வெற்றிப்பட இயக்குனரின் அடுத்த படத்தில் கார்த்தி?

கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கைதி' மற்றும் 'தம்பி' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களின்

வெற்றி பெற்றவர் கூட தற்கொலையா? லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் தற்கொலை குறித்து பிரபல நடிகை!

லக்ஷ்மன் ஸ்ருதி இசை குழுவின் ராமன் அவர்கள் நேற்று இரவு அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விஜய்யை அடுத்து சென்னை திரும்பிய அஜித்!

தளபதி விஜய் கடந்த சில வாரங்களாக கர்நாடக மாநிலம் ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்ற 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த நிலையில்

'தலைவர் 168' படப்பிடிப்பில் கலந்து கொண்ட கீர்த்திசுரேஷுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம்

டிக்டாக் மூலம் பிரபல அரசியல்வாதியை மிரட்டிய சென்னை இளைஞர்கள் கைது!

இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமின்றி நடுத்தர வயதைச் சேர்ந்தவர்களும் டிக்டாக் செயலியில் வீடியோக்களை வெளியிட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.