மூன்று படத்திற்கும் ஒரே டைட்டில்: பிரபல இயக்குனர் அதிரடி!

  • IndiaGlitz, [Thursday,December 26 2019]

சியான் விக்ரம் நடித்து வரும் 58வது படத்திற்கு 'கோப்ரா’ என்ற டைட்டிலில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான மோஷன் வீடியோவும் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த டைட்டில் ஏன் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

இந்த படத்தின் நாயகன் கேரக்டருக்கும் 'கோப்ரா’வுக்கும் ஒரு மிகப்பெரிய தொடர்பு இருப்பதாகவும் அதற்காகவே இந்த டைட்டிலை தான் வைத்ததாகவும், இதற்கு மேல்தான் எது சொன்னாலும் இந்த படத்தின் கதையை முழுமையாக கூறியது போல் ஆகிவிடும் என்பதால் தான் சொல்ல விரும்பவில்லை என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு மூன்று மொழிகளிலுமே 'கோப்ரா’ என்ற டைட்டில் தான் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பில் 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் அடுத்ததாக ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறிய அஜய்ஞானமுத்து, அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பில் வெளிநாட்டில் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனவரி இறுதியில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் என்றும் ஏஆர் ரஹ்மான் இந்த படத்திற்காக ஏற்கனவே மூன்று பாடல்கள் கம்போஸ் செய்து கொடுத்துள்ளார் என்றும் அந்த பேட்டியில் அஜய்ஞானமுத்து, தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.