'கோப்ரா' பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்: லாக்டவுன் முடிந்தவுடன் திருமணம்

  • IndiaGlitz, [Tuesday,June 02 2020]

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்று வளர்ந்து வரும் நடிகை ஒருவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. லாக்டவுன் முடிந்த உடன் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல மலையாள நடிகையும் தமிழில் ’அமர காவியம்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவின் சகோதரருக்கு ஜோடியாக நடித்த நடிகை மியா ஜார்ஜ். இவர் விஷ்ணு விஷால் நடித்த ’இன்று நேற்று நாளை’ சசிகுமார் நடித்த ’வெற்றிவேல்’ தினேஷ் நடித்த ’ஒரு நாள் கூத்து’ விஜய் ஆண்டனி நடித்த ’எமன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ள இவர் தற்போது விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் ’கோப்ரா’என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை மீரா ஜார்ஜூக்கு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதனை அடுத்து அஸ்வின் வீட்டில் சமிபத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. லாக்டவுன் கெடுபிடி காரணமாக இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் இவர்களது திருமணம் லாக்டவுன் முடிந்து, கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் வரும் செப்டம்பரில் நடைபெறும் என்றும் இரு வீட்டார் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது