'கோப்ரா' பட நடிகருக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

விக்ரம் நடித்துள்ள ’கோப்ரா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி உள்பட பலரது நடிப்பில் ’கோப்ரா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான். இவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திகொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

சமீபத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஓய்வு பெற்ற வீரர்கள் கலந்து கொண்டனர் என்பதும் இந்த போட்டியில் கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்ட இர்பான் பதானுக்கும் தற்போது கொரோனா பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடுக்கடலில் யோகா? மெய்சிலிர்க்க வைக்கும் இளம் நடிகையின்  டிரெக்கிங் அனுபவம்!

தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இளம் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். இவர் தற்போது ஒரு சில இந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பிரதமர் மோடியின் ஆசிபெற்ற வேட்பாளர் நடிகை குஷ்பு… பிரச்சாரத்தில் தமிழக முதல்வர்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகம்- இந்தியில் தேர்தல் பிரச்சாரம் தேவையா? உண்மையை உடைக்கும் பரபரப்பு வீடியோ!

இந்தியாவில் மாநில மொழிகளுக்கான தனித்தன்மையைக் குறித்து  தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

இயக்குனரானார் தமிழ் ஹீரோ: டைட்டில் அறிவிப்பு

பா ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான 'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தினேஷ் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் அவர் 'எதிர்நீச்சல்

மாலத்தீவு சுற்றுலா சென்ற மேலும் ஒரு பிக்பாஸ் தமிழ் நடிகை!

கடந்த சில மாதங்களாகவே மாலத்தீவுக்கு தமிழ் நடிகைகள் சென்று வருகின்றனர் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே