கடைசி நேரத்தில் காலை வாரிய சமக வேட்பாளர்..! அதிர்ந்து போன சரத்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், நேற்று வேட்புமனுவை வாபஸ் வாங்கியுள்ளார். இந்த செய்தி அக்கட்சியினருக்கு இறுதி நேரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக, மநீம-கூட்டணியில் சமக-வுக்கு 40 சீட்டுகள் ஒதுக்கப்பட்டது. இத்தனை சீட்டுகளுக்கும் ஆள் திரட்ட முடியாத சரத் அணி 3 சீட்டுகளை திருப்பி கொடுத்துவிட்டது. பின் 37 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது சமத்துவ மக்கள் கட்சி.
இந்தநிலையில் லால்குடியில் போட்டியிட இருந்த சமக வேட்பாளர் முரளிகிருஷ்ணன், இறுதி நேரத்தில் தனது வேட்புமனுவை வாபஸ் வாங்கியுள்ளார். தலைமையிடத்தில் இவர் எதுவும் அறிவிக்காமல் இப்படி செய்ததால், கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது. மேலும் இக்கட்சி சார்பாக லால்குடியில் தற்போது யாரும் போட்டியிடவில்லை.
வாபஸ் வாங்கிய முரளி கிருஷ்னன் நேரடியாக திமுக முதன்மை செயலாளர் கே.என் நேருவை சந்தித்து, திமுகவில் இணைந்தார். மேலும் கட்சிக்காக தேர்தல் பணிகளை தொடர்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
லால்குடி தொகுதி:
இத்தொகுதியில் திமுக சார்பாக அமைச்சர் சௌந்தரபாண்டியனும், அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில கட்சி சார்ந்த வேட்பாளரான தர்மராஜ்-ம் போட்டியிடுகிறார்கள். கமலின் கூட்டணி கட்சி ஓட்டுக்களை பிரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முரளி திமுக-வில் இணைந்தது சமக தலைவர் மற்றும் கட்சியினர் மத்தயில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com