பாடகர் வேல்முருகன் மகள் செய்த கின்னஸ் சாதனை: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

பாடகர் வேல்முருகன் மகள் செய்த கின்னஸ் சாதனைக்காக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேல்முருகன் குடும்பத்தாரை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழ் திரையுலக பாடகர்களில் ஒருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான வேல்முருகனின் மகள் ரக்ஷனா சமீபத்தில் கின்னஸ் சாதனை ஒன்றை செய்துள்ளார்

செல்வி ரக்சனா ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகத்தின் சின்னங்களை அடையாளம் கூறியதை அடுத்து அவருக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது. இதனையடுத்து கின்னஸ் சாதனை செய்த ரக்‌ஷனா குடும்பத்தினர்களை வரவழைத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பாடகர் திரு. வேல்முருகன் அவர்களின் மகள் செல்வி ரக்‌ஷனா வேல்முருகன், ஒரு நிமிடத்தில் 51 பல்கலைக்கழகத்தின் சின்னங்களை அடையாளம் கண்டு கின்னஸ் உலக சாதனை படைத்தமைக்காக மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.