சான் பிரான்சிஸ்கோவில் தமிழ் திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்.. இயக்குனருக்கு வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக சென்ற நிலையில் அங்கு அவர் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்த்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோ சென்ற தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அங்கு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’வாழை’ திரைப்படத்தை பார்த்து உள்ளார். இந்த படத்தை பார்த்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் மாரி செல்வராஜிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது:
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்.
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!
பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கி பயணத்தை தொடர்வோம்!
தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்து வரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்!
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி @mari_selvaraj அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்💐
— M.K.Stalin (@mkstalin) September 2, 2024
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments