'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு': விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலினின் புரமோ வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,March 25 2023]

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற புதிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பேசி உள்ளார். இது குறித்த புரமோ வீடியோவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசியதாவது:

உயிர் திரியில் தமிழ் சுடரை ஏற்றி வைப்போம். எந்நாளும் தமிழோடு நாம் ஒளிர்வோம். தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்று சொல்வோம். தமிழ் பேசி தமிழ் பேசி பெருமைக் கொள்வோம். தமிழ் போல் மொழியில்லை, தமிழின்றி நாமில்லை. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” என்கிறார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ’தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிலையில் இந்த நிகழ்ச்சியை நெல்லை கண்ணன், கவிஞர் அறிவுமதி ஆகியோர் நடுவர்களாக இருந்து நடத்தி வைத்தனர். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள பேச்சாளர்களை தேடும் ஒரு நிகழ்ச்சியாகவே இது இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்க இருக்கும் நிலையில் இது குறித்த புர்மோ வெளியாகி உள்ளது என்பதும், அதில் தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'லியோ' படக்குழுவினர்களிடம் ஆலோசனை கேட்ட சிவகார்த்திகேயன் படக்குழு: எதற்கு தெரியுமா?

 சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 21 வது படத்தின் படக்குழுவினர் 'லியோ' படக்குழுவினர்களிடம் சில முக்கிய ஆலோசனைகளை கேட்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 

மலேசியா முருகன் கோவிலில் ரகசிய திருமணம்.. 'ரோஜா' சீரியல் நடிகையின் கணவர் யார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பான 'ரோஜா' என்ற சீரியலில் நடித்த நடிகை மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. 

'பொன்னியின் செல்வன் 2' டிரைலர்: அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில்

'ஜில்லுன்னு ஒரு காதல்' பூமிகாவா இவர்? கணவர், குழந்தையுடன் அசத்தல் புகைப்படங்கள்..!

 சூர்யா நடித்த 'ஜில்லுனு ஒரு காதல்' உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை பூமிகாவின் கணவர் மற்றும் மகனின் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

இயக்குனராகும் பாரதிராஜா மகன்.. ஹீரோ, தயாரிப்பாளர் யார் தெரியுமா?

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது முதன்முதலாக ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.