'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு': விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலினின் புரமோ வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற புதிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பேசி உள்ளார். இது குறித்த புரமோ வீடியோவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசியதாவது:
உயிர் திரியில் தமிழ் சுடரை ஏற்றி வைப்போம். எந்நாளும் தமிழோடு நாம் ஒளிர்வோம். தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்று சொல்வோம். தமிழ் பேசி தமிழ் பேசி பெருமைக் கொள்வோம். தமிழ் போல் மொழியில்லை, தமிழின்றி நாமில்லை. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” என்கிறார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ’தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிலையில் இந்த நிகழ்ச்சியை நெல்லை கண்ணன், கவிஞர் அறிவுமதி ஆகியோர் நடுவர்களாக இருந்து நடத்தி வைத்தனர். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள பேச்சாளர்களை தேடும் ஒரு நிகழ்ச்சியாகவே இது இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்க இருக்கும் நிலையில் இது குறித்த புர்மோ வெளியாகி உள்ளது என்பதும், அதில் தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com