இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று நடைபெற இருப்பதாக ஏற்கனவே வந்த செய்திகளைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற்ற ஷங்கரின் மகள் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்தினார்.

ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவை மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரன் என்பவரது மகன் ரோஹித் என்பவர் இன்று திருமணம் செய்து கொள்கிறார். ரோஹித் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதும், இவர் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.