சரண்யா - பொன்வண்ணன் மகள் திருமணம்: முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஆச்சரியம்!

  • IndiaGlitz, [Tuesday,July 06 2021]

நடிகை சரண்யா மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் தம்பதியின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆச்சரியம் அளித்துள்ளது.

நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன் மற்றும் குணசித்திர நடிகை சரண்யா பொன்வண்ணன் தம்பதிகளின் மூத்த மகள் பிரியதர்ஷினி. இவருக்கும் விக்னேஷ் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் நேற்று சென்னை மணப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.


.
இந்த திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்தத் திருமணத்தில் தனது குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பசுமை கூடையை பரிசளித்தார். அவரது வருகை மணமக்களுக்கும், பொன்வண்ணன் - சரண்யா தம்பதிக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்வண்ணன் - சரண்யா தம்பதிகளின் மகள் திருமணத்தில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

லேடி சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்குபவர் வடிவேலு பட இயக்குனரா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் தற்போதும் அவர்தான் தமிழ் திரை உலகின் நம்பர்-1 நடிகை

'தளபதி 67' திரைப்படத்தின் தயாரிப்பாளர் இந்த பிரபல நடிகரின் தந்தையா?

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த நடிகர் கார்த்தி: காரணம் இதுதான்!

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை திரைத்துறையின் பிரதிநிதிகளாக நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி உள்ளிட்ட ஒரு சிலர் சந்தித்துள்ளனர். சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள

ரவுடி பேபி சூர்யா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்....!

கடந்த 2 நாட்களாக டிக் டாக் சூர்யா, லக்கி இலக்கியா பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த கேள்வியை என்கிட்டே ஏன் கேட்டிங்க: பாதி பேட்டியில் எழுந்து சென்ற இலக்கியா!

டிக் டாக் இலக்கியா நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போது ஒரு குறிப்பிட்ட கேள்வியை கேட்ட உடன் பாதியில் பேட்டியை முடித்துக் கொண்டு எழுந்து சென்றார் டிக் டாக் இலக்கியா