ஏ.ஆர்.ரஹ்மான் இல்ல திருமணம்: முதல்வர் ஸ்டாலின் கொடுத்த மறக்க முடியாத பரிசு!
- IndiaGlitz, [Friday,December 10 2021]
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் புதுமண தம்பதிகளுக்கு மறக்க முடியாத பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் உறவினரும் நடிகருமான ரகுமான் மகள் ருஷ்டா ரஹ்மான் மற்றும் அல்தாப் நவாப் ஆகியோர்களின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பசுமை கூடை மரக்கன்றுகளை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். கடந்த சில நாட்களாகவே திருமணத்திற்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பசுமைமரக்கன்றுகள் என்ற மறக்க முடியாத பரிசுகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.