விஜய்காந்த் வீட்டிற்கே சென்று இன்ப அதிர்ச்சி முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரது உடல் நலம் விசாரித்தது ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலையில் விஜயகாந்த் அவர்களின் வீட்டிற்குச் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன் மற்றும் ஆ ராசா எம்பி ஆகியோர் உடன் சென்றனர். விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை எல்கே சதீஷ் வரவேற்று அழைத்துச் சென்றார்.

விஜயகாந்த்துக்கு பொன்னாடை போர்த்திய முதல்வர் ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்தார். அப்போது விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்றும் அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி வைத்திருந்த விஜயகாந்தின் தேமுதிக, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்தது. ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு நட்பு முறையில் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் விஜயகாந்தை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இன்று வெளியாகின்றதா 'வலிமை' பர்ஸ்ட்லுக் போஸ்டர்?

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பு 5 நாள் நடைபெறும் என்றும் இத்துடன் 'வலிமை'

13 வயது மாற்றுத்திறனாளி சாதனை சிறுவனுக்கு வாய்ப்பு அளித்த டி.இமான்!

கேரளாவைச் சேர்ந்த 13 வயது மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு தான் இசையமைக்கும் படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ள இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

என் கணவருக்கு நான் தான் கொள்ளி வச்சேன்: தமிழ் சீரியல் நடிகை

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தனது கணவருக்கு தானே கொள்ளி வைத்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நடிகை ஸ்ரேயாவை ஏமாற்றிய கணவர்: வைரல் வீடியோ

நடிகை ஸ்ரேயாவை அவருடைய கணவர் ஏமாற்றிய வீடியோ ஸ்ரேயாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது 

2 குழந்தை பெற்றுக் கொண்டால் அரசுபணி கிடையாதா? சர்ச்சையைக் கிளப்பும் புது சட்டம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆட்சிக்காலம் முடிவடைய இருக்கிறது. இதையடுத்து அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்