மனோபாலா மறைவுக்கு முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா இரங்கல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் மனோபாலா இன்று திடீரென காலமானது தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் மனோபாலா மறைவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா, பாரதிராஜா உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அது குறித்து தற்போது பார்ப்போம்
முதலமைச்சர் ஸ்டாலின்: திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திரு. மனோபாலா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்
எடப்பாடி பழனிசாமி: தமிழ் திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான திரு.மனோபாலா அவர்கள் உடல்நிலை குறைவால் இன்று மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவரும்,தலைமை கழக பேச்சாளரும் ஆன திரு.மனோ பாலா அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
டிடிவி தினகரன்: நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். உதவி இயக்குநராக திரையுலகில் கால் பதித்து, தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர். மனோபாலா அவர்களின் மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மனோபாலா மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், சக திரை கலைஞர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ரஜினிகாந்த்: பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
கமல்ஹாசன்: இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இளையராஜா: நண்பர் மனோபாலா காலமான செய்தி கேட்டு மிகவும் துயரடைந்தேன். மனபாலா ஆரம்பத்தில் பத்திரிகையாளராகவும் பின்னர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றி பின்னாளில் சொந்தமாக படம் இயக்கினார். என்னை பார்ப்பதற்காக கோடம்பாக்கம் பாலத்தில் செல்லும்போது காரில் பார்க்க காத்திருந்த எத்தனையோ இயக்குனர்களில் மனோபாலாவும் ஒருவர். பின்னர் இயக்குனர் நடிகர் ஆன பின்னர் கூட ரெக்கார்டிங் தியேட்டரில் சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை கூறி மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
பாரதிராஜா: என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் திரையு உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேர் இழப்பாகும்
“திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 3, 2023
திரு. மனோபாலா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது… pic.twitter.com/skFMWRod0H
தமிழ் திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான திரு.மனோபாலா அவர்கள் உடல்நிலை குறைவால் இன்று மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 3, 2023
கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவரும்,தலைமை கழக பேச்சாளரும் ஆன திரு.மனோ பாலா அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு… pic.twitter.com/TIQfYHcGMG
நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 3, 2023
உதவி இயக்குநராக திரையுலகில் கால் பதித்து, தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர். மனோபாலா…
பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.@manobalam
— Rajinikanth (@rajinikanth) May 3, 2023
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத்…
— Kamal Haasan (@ikamalhaasan) May 3, 2023
என் மாணவன்
— Bharathiraja (@offBharathiraja) May 3, 2023
மனோபாலா மறைவு
எனக்கும் எங்கள்
தமிழ் திரை உலகிற்கும்
ஈடு செய்யமுடியாத
பேரிழப்பாகும் pic.twitter.com/RmbtwoBeWh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com