மனோபாலா மறைவுக்கு முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா இரங்கல்..!

  • IndiaGlitz, [Wednesday,May 03 2023]

நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் மனோபாலா இன்று திடீரென காலமானது தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் மனோபாலா மறைவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா, பாரதிராஜா உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அது குறித்து தற்போது பார்ப்போம்

முதலமைச்சர் ஸ்டாலின்: திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திரு. மனோபாலா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்

எடப்பாடி பழனிசாமி: தமிழ் திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான திரு.மனோபாலா அவர்கள் உடல்நிலை குறைவால் இன்று மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவரும்,தலைமை கழக பேச்சாளரும் ஆன திரு.மனோ பாலா அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

டிடிவி தினகரன்: நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். உதவி இயக்குநராக திரையுலகில் கால் பதித்து, தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர். மனோபாலா அவர்களின் மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மனோபாலா மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், சக திரை கலைஞர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ரஜினிகாந்த்: பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

கமல்ஹாசன்: இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இளையராஜா: நண்பர் மனோபாலா காலமான செய்தி கேட்டு மிகவும் துயரடைந்தேன். மனபாலா ஆரம்பத்தில் பத்திரிகையாளராகவும் பின்னர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றி பின்னாளில் சொந்தமாக படம் இயக்கினார். என்னை பார்ப்பதற்காக கோடம்பாக்கம் பாலத்தில் செல்லும்போது காரில் பார்க்க காத்திருந்த எத்தனையோ இயக்குனர்களில் மனோபாலாவும் ஒருவர். பின்னர் இயக்குனர் நடிகர் ஆன பின்னர் கூட ரெக்கார்டிங் தியேட்டரில் சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை கூறி மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

பாரதிராஜா: என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் திரையு உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேர் இழப்பாகும்

More News

நல்லா தான் இருந்தாரு, திடீரென போய்விட்டார்.. மனோபாலா மறைவு குறித்து மகன் உருக்கம்..!

தனது தந்தை நல்லபடியாக உடல் நலம் தேறி வந்ததாகவும் திடீரென அவர் மறைந்து விட்டது தங்களை அதிர்ச்சி கொள்ளாக்கி உள்ளதாகவும் மனோபாலாவின் மகன் பேட்டி அளித்துள்ளார் 

நடிகர் - இயக்குனர் மனோபாலா காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா திடீரென காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திடீரென 'தங்கலான்' படப்பிடிப்புக்கு செல்லாத விக்ரம்.. அதிர்ச்சி காரணம்..!

சியான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் மீண்டும் தொடங்கிய நிலையில் இந்த படப்பிடிப்பில் விக்ரம் உள்பட படக்குழுவினர் அனைவரும்

விஜய்யின் மகள் ஜனனி, மகனாக நடிப்பது யார் தெரியுமா? 'லியோ' படத்தின் சூப்பர் அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் அவரது மகளாக பிக்பாஸ் ஜனனி நடித்து வருவதாக கூறப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தளபதி விஜய்யின் மகனாக நடிக்கும்

முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபலம்.. கமல்ஹாசன் அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது