ரஜினிகாந்த் பிறந்த நாள்: முதல்வர் முதல் எடப்பாடி வரை.. கமல் முதல் சரத்குமார் வரை.. குவியும் வாழ்த்துக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல் பல அரசியல்வாதிகளும் உலகநாயகன் கமலஹாசன் முதல் பல நடிகர்களும், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர், அது குறித்து தற்போது பார்ப்போம்.
முதல்வர் முக ஸ்டாலின்: என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
எடப்பாடி பழனிசாமி: அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். திரு.ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அமைச்சர் சக்கரபாணி: கலையுலகில் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் தன்னிகரில்லா இடம் பிடித்து, சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் ரசிக்கும் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
செல்வபெருந்தகை காங்கிரஸ் எம்.எல்.ஏ: இன்று பிறந்த நாள் காணும் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எஸ்பி வேலுமணி முன்னாள் அமைச்சர்: தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஸ்டார், அருமை நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் பல்லாண்டுகள் வாழ்ந்து, ரசிகப்பெருமக்களை தொடர்ந்து மகிழ்விக்க பிரார்த்திக்கின்றேன்.
கமல்ஹாசன்: அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்
சரத்குமார்: அன்பு நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இறைவன் பூரண ஆரோக்கியமும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையச் செய்ய என் வாழ்த்துகள்.
சீனுராமசாமி: முதல் துறையில் சுறுசுறுப்பாக கவனமாக ஓட்டுனரை விட பயணியை விட எப்போதும் விழிப்புணர்ச்சியாக கண்டக்டர் பணியில்
சிவாஜி ராவ் கெய்க்வாட். அன்று பேருந்தில் விசிலடித்தவர் இன்று உலகமே அவரைப் பார்த்து விசில் அடித்து ஆரவாரம் செய்கிறது அதுதான் சூப்பர் ஸ்டார்
பாடலாசிரியர் வைரமுத்து: பாசமுள்ள மனிதனப்பா - நீ
மீசவச்ச குழந்தையப்பா
நன்றியுள்ள ஆளப்பா
நல்லதம்பி நீயப்பா
தாலாட்டி வளர்த்தது
தமிழ்நாட்டு மண்ணப்பா
தங்கமனம் வாழ்கவென்று
தமிழ்சொல்வேன் நானப்பா
மேலும் இசையமைப்பாளர் அனிருத், நடிகை கஸ்தூரி, இயக்குனர் பா ரஞ்சித் உள்பட பல திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) December 12, 2022
நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.திரு @rajinikanth
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 12, 2022
அவர்கள் நீண்ட ஆயுளோடும்
நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். pic.twitter.com/KCxqohUitV
அன்பு நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இறைவன் பூரண ஆரோக்கியமும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையச் செய்ய என் வாழ்த்துகள்.#HBDRajinikanth @rajinikanth pic.twitter.com/ohV9iikN1o
— R Sarath Kumar (@realsarathkumar) December 12, 2022
பாசமுள்ள மனிதனப்பா - நீ
— வைரமுத்து (@Vairamuthu) December 12, 2022
மீசவச்ச குழந்தையப்பா
நன்றியுள்ள ஆளப்பா
நல்லதம்பி நீயப்பா
தாலாட்டி வளர்த்தது
தமிழ்நாட்டு மண்ணப்பா
தங்கமனம் வாழ்கவென்று
தமிழ்சொல்வேன் நானப்பா#Rajinikanth #RajinikanthBirthday pic.twitter.com/IY5dghqBkb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com