இசைஞானியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய முதல்வர்.. கமல், பாரதிராஜா வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இசை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று இசைஞானி இளையராஜாவின் கோடம்பாக்கம் ஸ்டுடியோவுக்கு சென்று தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, கேன்.என்.நேரு ஆகியோர்களும் சென்றனர்.
தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த தமிழக முதல்வரை இசைஞானி இளையராஜா வாசலில் இன்று வரவேற்று தனது ஸ்டுடியோவுக்கு அழைத்து சென்றார் என்பதும், இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இசைஞானி இளையராஜாவுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது: காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா!
அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி!
அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை 'இசைஞானி' எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர்.
இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக - உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன்.
எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!
அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன், இசைஞானிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்
மேலும் இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
மொழி கடந்து
தேசம் கடந்து
கோடிக்கணக்கான
இதயங்களை தாலட்டி
அரை நூற்றாண்டாக
இசை மழையால்
ஆட்சி செய்துகொண்டிருக்கும்
என் உயிர் தோழனுக்கு
இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.
காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா!
— M.K.Stalin (@mkstalin) June 2, 2023
அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார்.… pic.twitter.com/Os1dE1UJKH
மொழி கடந்து
— Bharathiraja (@offBharathiraja) June 2, 2023
தேசம் கடந்து
கோடிக்கணக்கான
இதயங்களை தாலட்டி
அரை நூற்றாண்டாக
இசை மழையால்
ஆட்சி செய்துகொண்டிருக்கும்
என் உயிர் தோழனுக்கு
இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.@ilaiyaraaja pic.twitter.com/NZItPYDwuV
திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய… pic.twitter.com/0csPLNnE7P
— Kamal Haasan (@ikamalhaasan) June 2, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments