தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 70 வது பிறந்தநாள்; ரஜினி, கமல், இளையராஜா வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:
கமல்ஹாசன்: முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி திரு முக ஸ்டாலின் அவர்கள் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.
ரஜினிகாந்த்: என்னுடைய இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் அவர் நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியாகவும் வாழ்ந்து மக்கள் சேவை செய்வதற்கு அவருடைய 70 வது பிறந்தநாளில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இளையராஜா: தன்னுடைய 70 வது பிறந்த நாளை கொண்டாடும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி முக ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்துடனும் ஓங்கு புகழோடு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
”என்னுடைய இனிய நண்பர் ஸ்டாலின்” - அட்வான்ஸாக வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்..https://t.co/wupaoCzH82 | #MKStalin #HBDMKStalin #Rajinikanth𓃵 @rajinikanth @mkstalin pic.twitter.com/JuYbYVBYi8
— ABP Nadu (@abpnadu) February 28, 2023
முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி திரு @mkstalin அவர்கள் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன். pic.twitter.com/UO4QPowCU4
— Kamal Haasan (@ikamalhaasan) March 1, 2023
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இசையமைப்பாளர் இளையராஜா#Ilaiyaraaja | #MKStalin | #Birthdaywishes | @MKstalin pic.twitter.com/MWnJbYrzM8
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 28, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments