தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குவது இந்த இயக்குனரா?

  • IndiaGlitz, [Wednesday,May 04 2022]

இந்திய திரையுலகில் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் எடுப்பதற்கு புதிதல்ல. தோனி, சச்சின், ஜெயலலிதா உள்பட பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல குணசித்திர நடிகரும் ’கன்னிமாடம்’ என்ற திரைப்படத்தை இயக்கிவருமான போஸ் வெங்கட் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் இதற்காக அவர் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை எழுதும் பணியை அஜயன்பாலா மேற்கொண்டு வருவதாகவும் தமிழக முதல்வரின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கேரக்டரில் சமுத்திரகனி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது .

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது என்றும், இந்த படத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் எமர்ஜென்சி காலத்தில் பட்ட துன்பங்கள், அவர் படிப்படியாக தலைவராக உருவெடுத்த காட்சிகள் அடங்கி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

புதிய திரைப்படத்திற்கு டைட்டில் வைத்த வைரமுத்து: சின்மயி, கங்கை அமரனின் ரியாக்சன்!

நடிகர் பாபி சிம்ஹா நடிக்கவிருக்கும் படத்திற்கு டைட்டில் வைத்த வைரமுத்துவிற்கு கங்கை அமரன் மற்றும் சின்மயி காட்டிய ரியாக்சன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன்' பின்னணி இசை: வைரலாகும் மாஸ் வீடியோ

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து முழுவீச்சில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

உலக சாதனை படைக்க இருக்கும் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற கலைப்புலி எஸ்.தாணு!

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற உலக சாதனையை பெற இருக்கும் திரைப்படத்தின் உலகளாவிய ரிலீஸ் உரிமையை கலைப்புலி எஸ் தாணு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

படப்பிடிப்பின்போது மகேஷ்பாபுவை அடித்த கீர்த்தி சுரேஷ்: அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

படப்பிடிப்பின்போது மகேஷ்பாபுவை தெரியாமல் கீர்த்தி சுரேஷ் அடித்து விட்டதாகவும் அதன் பிறகு அவர் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், ஹிந்தியை கற்று கொள்ளுங்கள்: சுஹாசினி மணிரத்னம்

ஹிந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும், ஹிந்தி நல்ல மொழி என்றும் அனைவரும் ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சுஹாசினி மணிரத்தினம் நகை கடை நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.