இசை நிகழ்ச்சி ரத்து.. ஏஆர் ரஹ்மான் ஆதங்கம்.. உடனடியாக பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று சென்னை பனையூரில் இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் கனமழை காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை மற்றும் வெளியூரிலிருந்து வந்திருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஏமாற்றத்தை அவர்கள் தங்கள் சமூக வலைதளம் மூலம் தெரிவித்த நிலையில் அவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.
அரசாங்கத்தின் உதவியுடன் விரைவில் சென்னையில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு உலகத்தரம் வாய்ந்த நவீன உள் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.
ஏஆர் ரஹ்மானின் இந்த பதிவிற்கு உடனடியாக பதில் அளித்த முதலமைச்சர் முக ஸ்டாலின் ’மாநாடு, கண்காட்சிகள் உள்ளிட்டவைகளை நடத்துவதற்காக விரைவில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கலைஞர் கூட்டரங்கு அமைக்கப்படும். அதில் ஹோட்டல்கள், பார்க்கிங் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்’ என்று கூறியுள்ளார்.
Chennai will soon fulfil this long-felt aspiration!#KalaignarConventionCentre to be established on #ECR, will be a world-class facility that can host large format concerts, performances, events, exhibitions and conventions.
— M.K.Stalin (@mkstalin) August 12, 2023
With iconic landscaping, hotels, food courts,… https://t.co/NiXtNntTzp
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments