ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை மற்றும் பிரபலங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஸ்டாலின்: அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களைத் தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்.
அமைச்சர் உதயநிதி: தமிழ் சினிமாவில் தலைமுறைகள் கடந்து எல்லோரையும் மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்-க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது கலையுலகப் பயணம் இன்னும் பல உயரங்களை அடையவும் - நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழவும் மனமார்ந்த வாழ்த்துகள்.
அண்ணாமலை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான திரு ரஜினிகாந்த் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்கள் மீது வைத்திருக்கும் மட்டற்ற அன்பும் நிலைத்திருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
கமல்ஹாசன்: அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments