முதல்வர் பதவி என்ன மூர்மார்க்கெட் பொம்மையா? கமலுக்கு அமைச்சர் ஜெயகுமார் பதில்
- IndiaGlitz, [Monday,September 25 2017]
உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று தமிழக அரசின் டெங்கு நடவடிக்கையை குறைகூறி, சென்னை மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்ததையும் சுட்டி காட்டி, இந்த அரசு விலக வேண்டும் என்று தனது டுவிட்டரில் கூறியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'தமிழக அரசு டெங்கு காயச்சல் பரவாமல் தடுக்க உரிய நடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு படத்தில் கமல்ஹாசனின் மகளே நடித்துள்ளார்.
கமல்ஹாசன் நேரடியாக முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கின்றார். மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே முதல்வராக முடியும். கூட்டம் கூடுவதாலும் டுவிட்டரில் பதிவு செய்வதாலும் முதல்வர் ஆக முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் பதவி என்பது மூர் மார்க்கெட்டில் கிடைக்கும் பொம்மையல்ல. முதலில் கமல்ஹாசன் எம்.எல்.ஏ ஆகட்டும், அத்தைக்கு மீசை முளைத்தால் அதன் பின்னர் என்ன நடக்கும் என்பதை பார்த்து கொள்ளலாம் என்று கூறினார். இதற்கு கமல்ஹாசன் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்