அதிமுகவில் தொண்டர்கள்கூட முதல்வராக முடியும்… பிரச்சாரத்திற்கு இடையே தமிழக முதல்வர் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அவ்வபோது கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவருக்கு பதிலடி கொடுத்த தமிழக முதல்வர் தான் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன் எனக் கூறி இருந்தார். அதோடு அதிமுகவில் மட்டும்தான் தொண்டர்கள்கூட தமிழக முதல்வராக முடியும் என்றும் தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய தலைவர்கள் இல்லாமல் முதல் முறையாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் இதன் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. இத்தேர்தலை எதிர்நோக்கி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரண்டும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதோடு அவ்வபோது கருத்து மோதல்களிலும் ஈடுபட்டு வருகின்றன.
இதில் “அதிமுகவை நிராகரிப்போம்“ என்ற தலைவப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். அதே வேளையில் ஆளும் அதிகமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற தலைப்பில் மாவட்டம் வாரியாகத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் தன்மீது வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவர் தக்கப் பதிலடி கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவில் அருகே பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர், அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன்கூட முதல்வராக முடியும் என்று தெரிவித்தார். மேலும் உணவு தானிய உற்பத்தியில் தொடர்ந்து தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் கூறினார். அதோடு தமிழக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது என்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments