எதிர்க்கட்சி கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது- தமிழக முதல்வர் காட்டம்!

  • IndiaGlitz, [Tuesday,January 26 2021]

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து இருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் தொண்டன் கூட முதல்வராக முடியும் என்றும் அதிமுக ஒருபோதும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடாது என்றும் விளக்கம் அளித்து இருந்தார். அதேபோல எதிர்க்கட்சி தன்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் நான் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன், நான் ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்தவன் தான், அதை மறந்துவிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சனத்தில் ஈடுபடுவது நியாயமில்லை என்றும் கூறி இருந்தார்.

மேலும், கள்ளக்குறிச்சியில் மொழிப்போர் தியாகிகள் தின நாளில் பேசிய தமிழக முதல்வர், 234 தொகுதிகளிலும் வெற்றிப்பெறப் போகிறோம் என்று எதிர்க்கட்சி தலைவர் பேசி இருந்தார். அதன் பிறகு 200 தொகுதி என்று சொல்கிறார். இரண்டே நாளில் 34 தொகுதியை அவரே இழந்து விட்டார். அவர்களுக்கு மொத்தம் 34 தொகுதி தான் கிடைக்கும். அதுக்கூட இல்லாமலும் போகலாம். எதிர்க்கட்சி அடிப்படையில் ஒரு குடும்பக் கட்சி என்றும் விமர்சனம் செய்தார்.

அதோடு நாட்டு மக்களுக்காக எதிர்க்கட்சி என்ன செய்தது? அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது. அது கட்சியாகத் தெரியவில்லை. அந்தக் கட்சிக்கு ஷேர்மனாக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். இவர் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும். எனவே குடும்ப உறுப்பினர்களை கழித்துவிட்டு பார்த்தால் அதில் வேறு ஒன்றும் தெரியவில்லை என்று அதிரடியாக பேசி இருந்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பிறகு அவரது மகன் கட்சிக்குள் நுழைந்து தற்போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அதற்கு பிறகு இவரது மகன் கட்சிக்குள் தலையெடுத்து செயலாற்றி வருகிறார். இப்படித்தான் எதிர்க்கட்சி செயல்பட்டு வருகிறது. இதைக் குடும்பக் கட்சி என்று சொல்வதில் தவறில்லை என்றும் அதிரடியாக விமர்சித்து பேசினார். தமிழகத்தில் தேர்தல் வரும் மே மாதம் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அதிமுகவும் அதிரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வாஷிங்டன் சுந்தருக்கு சென்னை மாநகராட்சி கொடுத்த முக்கிய பதவி!

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது என்பதும் இதில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை வென்றது என்பதும் தெரிந்ததே

ஜெயலலிதா விழா நடத்தலாம், இதை மட்டும் நடத்தக் கூடாதா? கமல்ஹாசன் கேள்வி

குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா? என உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொல்லார்டு மாதிரி பொளந்து கட்டுறார்: யோகிபாபுவின் மாஸ் பேட்டிங் வீடியோ!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு தற்போது கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி ஒருசில

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு மிக உயர்ந்த விருது அறிவிப்பு!

மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது

ரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளுக்கு தடையா? ரிசர்வ் வங்கி விளக்கம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பழைய 100 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்ற தகவல் ஊடகங்களில் வெளியானது.